வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் மீண்டும் ரஜினியின் ராணா படப்பிடிப்பு தொடங்குகிறது என்ற செய்தி கோடம்பாக்கத்தை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் பிரமாண்ட சரித்திரப் படம் ராணா. ரஜினியின் கனவுப் படம் இது. ரஜினியே எழுதிய கதை இது.
கேஎஸ் ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோன் பிரதான நாயகியாக நடிக்கிறார்.
படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் ஏவிஎம்மில் தொடங்கியது. இதில் பங்கேற்ற கையோடு ரஜினியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. மே, ஜூன் மாதங்களில் அவர் சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றார். ஜூலை 13-ம் தேதி சென்னை திரும்பிய அவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார்.
மீண்டும் ராணா படப்பிடிப்பை தொடங்குவது குறித்து இயக்குநர் ரவிக்குமார் மற்றும் குழுவினருடன் தீவிரமாக ஆலோசனை செய்து வந்தார் ரஜினி.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் மீண்டும் ராணா படப்பிடிப்பைத் தொடங்க ரஜினி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது கோடம்பாக்கத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. "இந்தப் படம் மூலம் பல ஆயிரம் கலைஞர்களுக்கு வேலை கிடைப்பது ஒருபக்கம், மறுபக்கம் திரைப்பட வர்த்தகத்தில் இருக்கும் தேக்க நிலை நீங்குவதற்கான வாய்ப்பு போன்றவற்றால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி இது," என்றார் பெப்சி அமைப்பச் சேர்ந்த ஒரு நிர்வாகி.
ராணா படப்பிடிப்பை மூன்று கட்டங்களாக 200 நாட்களுக்கு நடத்த இயக்குநர் ரவிக்குமார் திட்டமிட்டுள்ளார். முதல்கட்டப் படப்பிடிப்பு ஏவிஎம்மில் நடக்கிறது. சில தினங்களில் வெளிநாடு செல்லும் படக்குழு, மீண்டும் இந்தியா திரும்பி, ஆக்ரா, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளது.
படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை முழுவதுமாக முடித்துவிட்டார் ஏ ஆர் ரஹ்மான். இப்போது பாடல்களை மாஸ்டரிங் செய்யும் பணியையும் துவங்கிவிட்டாராம்.