இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரப்போகிறது. பாதி இந்தியாவை உனக்கு எந்த ஒரு சீட்டும் கிடைக்காமல் அன்னா ஹசாரே காலி பண்ணிவிடுவார். தென் இந்தியா காங்கிரஸ் கட்சியை நான் காலி சென்று விடுவேன். கேரளாவில் போய் என் நண்பர்கள் மூலம் என்னுடைய மொழியை பெயர்க்க வைத்து உன் வண்டவாளங்களை எடுத்துச் சொல்வேன். ஆந்திரா சென்று என் அண்ணி நடிகை ரோஜா மூலம் தகவலை மொழிபெயர்த்து அங்கே உனக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்துவிடுவேன். நாங்கள் இருக்கும் வரை நீ ஆட்சிக்கு வர முடியாது என்றார் சீமான்.
ஆற்காட்டில் நேற்று இரவு நடந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நாம் தமிழர் தலைவர் சீமான் பேசினார். அவரது பேச்சு:
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் இவர்களின் விடுதலையே தமிழினத்தின் விடுதலை. அதற்காகத்தான் போராடுகிறோம். இவர்கள் விடுதலை அடைந்தால் ஈழத் தமிழினமே விடுதலை அடைந்ததாக அர்த்தம். இவர்களுக்கான போராட்டத்தில் நாம் எப்போதும் உள்ளோம்.
கடந்த ஆட்சிகளில் ஒன்றரை ஆண்டுகளில் ஐந்து முறை என்னை கைது செய்தார்கள். சட்டத்தை மதிப்பவன் நான். ஆகையால் கைதுக்கு பயப்படாமல் கைதானேன். போலீசார் அழைத்துச் சென்ற இடத்திற்கெல்லாம் சென்றேன். நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டேன். கருணாநிதியைப் போல கைதுக்கு பயந்து நான் ஒருமுறைக் கூட கத்தியதில்லை. நடித்ததில்லை. இப்போதும் கூட என்னை கைது செய்தார்கள். நான் கைதானேன். நடைப் பயணத்தை நிறுத்துங்கள் என்றார்கள். சட்டத்தை மதிப்பவன் நான். அதனால் தான் காவல்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க போராட்டத்தை கைவிட்டோம்.
ஆனால் லட்சியத்தையோ, நோக்கத்தையோ கைவிடவில்லை. ஈழத்தில் சுதுமனத்தில் தலைவர் பிரபாகரன் ஒரு பிரகடனம் செய்தார். நம் தொப்புள் கொடி உறவான தமிழர்கள் வாழும் நமது இந்தியா, நம் நலனை காக்கும் இந்தியா நம்மை ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்கிறது. நாம் அவர்களிடம் ஆயுதங்களை மட்டுமே ஒப்படைக்கிறோம். லட்சியத்தை ஒருபோதும் கைவிடவில்லை.
அதைப்போலத் தான் இன்று போராட்டத்தை கைவிட்டுள்ளோம். அதற்கு மற்றொரு காரணம் நமது முதல்வர் அம்மா, நமது தம்பிமார்கள் 3 பேரை விடுதலை செய்வார் என்ற நம்பிக்கைத்தான். அவர்களை நாம் நம்புவோம். அவர் சட்டமன்றத்தில் மூன்று பேரை காக்க தீர்மானம் கொண்டு வரும் முன்பு எத்தனை அழுத்தம், எதிர்ப்புகளை சந்தித்தார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.
மற்றவர்கள் பேசியதை விட அம்மா செய்து காட்டினார். இவர்களை காப்பாற்ற ரயில் மறியல், ஆளுநர் மாளிகை முற்றுகை, ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் செய்தோம். நம்மை அவர் கைது செய்யவில்லை. நசுக்க முற்படவில்லை. நம்மை அழிக்க முற்படவில்லை. நம்மை மதித்தார்.
இதையெல்லாம் மத்திய அரசு, தமிழக அரசை அம்மாவின் பெயரை கெடுக்க வேண்டும் என முடிவு செய்தது. ராஜபக்சே மீது போர்க்குற்றம சுமத்தி பொருளாதார தடை விதிக்க வேண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை மத்திய அரசு விரும்பவில்லை.
அம்மாவுக்கு உலக தமிழர் மத்தியில் அம்மாவுக்கு ஏற்பட்ட நற்பெயரை கெடுக்க, புகழை கெடுக்க மத்திய காங்கிரஸ் அரசு இந்த மூன்று பேரை தூக்கிலிட்டு முதல் அமைச்சர் அம்மாவை புகழை கெடுக்க முடிவு செய்தது. உடனே இதை தடுக்க கருணாநிதி ஆலோசனை சொல்கிறார். இவர் என்ன அம்மாவுக்கு அரசியல் ஆலோசகரா. 6 மாதத்திற்கு முன்பு நீர் தானே ஆட்சி புரிந்தீர். காப்பாற்ற வேண்டியதுதானே, காப்பாற்றும் எண்ணம் உனக்கு இல்லை. இப்ப நீ ஏன் துள்ளுரன்னு எங்களுக்கு தெரியும்.
இந்த அரசு தமிழனுக்காக ஆளும் அரசாக உள்ளது. வரும் உள்ளாசித் தேர்தலில், அதற்கு அடுத்து வரும் எம்பி தேர்தலில் காங்கிரஸ்காரர்களையும், அந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருபவர்களையும் ஒரு இடத்தில் கூட ஜெயக்க விடமாட்டேன்.
ஒருத்தன் டெல்லியில் இருந்து, தமிழ்நாட்டு தீர்மானம் எங்களை கட்டுப்படுத்தாது என்கிறான். அப்படி என்றால் உன் முடிவும் எங்களை கட்டுப்படுத்தாது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரப்போகிறது. பாதி இந்தியாவை உனக்கு எந்த ஒரு சீட்டும் கிடைக்காமல் அன்னா ஹசாரே காலி பண்ணிவிடுவார். தென் இந்தியா காங்கிரஸ் கட்சியை நான் காலி சென்றுவிடுவேன். கேரளாவில் போய் என் நண்பர்கள் மூலம் என்னுடைய மொழியை பெயர்க்க வைத்து உண்வண்டவாளங்களை எடுத்துச் சொல்வேன். ஆந்திரா சென்று என் அண்ணி நடிகை ரோஜா மூலம் தகவலை மொழிபெயர்த்து அங்கே உனக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்துவிடுவேன். நாங்கள் இருக்கும் வரை நீ ஆட்சிக்கு வர முடியாது.
இந்தியாவை ஆளப்போவதை யார் என்பதை எங்கள் முதல்வர் அம்மா தான் தீர்மானிக்கப்போகிறார். அம்மாவே நீங்கள் கவலைப்படாதீர்கள். தென்னிந்தியா முழுவதும் சுற்றி வெற்றிக் கனியை பறித்து வந்து உங்கள் காலடியில் நான், என் தம்பி மார்களும் சமர்ப்பிக்கிறோம்.
இந்த மூவரின் விடுதலை அம்மா கையில் தான் உள்ளது. நமது அன்னை அற்புதம்மாளின் கண்ணீரை முதல்வர் அம்மாதான் துடைக்க வேண்டும் என்று பேசினேன். அவர் ஒரு கண்ணீரில் விழுந்த நீரை துடைத்துவிட்டார். இன்னொரு கண்ணின் நீரையும் அம்மா துடைப்பார் என நம்புகிறேன். நீங்களும் நம்புங்கள் என்றார் சீமான்.