தமிழ், தெலுங்கு திரையுலகில் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை அனுஷ்கா நேற்று (07.11.11) தனது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார்.
"அருந்ததி" படம் மூலம் உச்சத்திற்கு சென்ற நடிகை அனுஷ்கா, தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும், முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். நடிகர்கள் பலரும் அனுஷ்காவுடன் நடிக்க துடித்து கொண்டு இருக்கின்றனர். இதனால் இவரது மார்க்கெட் ரேட் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு படத்திற்கு 1.25 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறாரம். தற்போது தென்னிந்திய நடிகைகளிலேயே அனுஷ்காவின் சம்பளம் தான் டாப் என்றால் அது மிகையல்ல.
ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அனுஷ்காவுக்கு (07.11.11) பிறந்தநாளும் கூட. பிறந்தநாளையொட்டி ஹைதராபாதில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று இரவு தனக்கு நெருக்கமானவர்களுடன் ஒரு மெகா பார்ட்டி கொண்டாடப் போகிறார்.
பிறந்தநாளையொட்டி அனுஷ்கா அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் நிறைய கற்றுக் கொண்டேன். வேறு தொழிலுக்கு போய் இருந்தால் பணம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால் புகழ் கிடைத்து இருக்காது. ஒரு படத்துக்காக 24 பிரிவுகளை சேர்ந்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் பெயர்கள் திரையில் வராது. ஆனாலும் சினிமா நம்முடையது என்ற ஈடுபாட்டில் உழைக்கின்றனர். அதில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சினிமாவில் நான் எதையும் இழக்கவில்லை. நிறைய சம்பாதித்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷ்கா...!